Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

பெரம்பலூர்,ஆக.28: பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் பலியான சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, எழுமூர் ஊராட்சிக்கு உட்பட்ட மழவராயநல்லூர் கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜவேல் (78). மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பெரம்பலூரில் உள்ள தனது மருமகளை பார்க்கச் சென்று விட்டு, மீண்டும் மழவராய நல்லூர் கிராமத்திற்கு மாலை 5-மணிக்கு அரியலூர் சாலை வழியாக அருமடல் ரோடு, பாலம்பாடி பிரிவுப்பாதை அருகே சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக தகவலறிந்து அங்கு வந்த மருவத்தூர் போலீசார் விபத்தில் பலியான ராஜவேலின் உடலைக் கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, முதியவர் மீது மோதிய வாகனம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.