பெரம்பலூர்,ஆக.28: பெரம்பலூர் மாவட்ட வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பாக நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய மதன கோபாலபுரம் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு வாரத்தில் ஐந்து நாட்கள் வங்கிப் பணி என்ற நியாயமான கோரிக்கையை அமல்படுத்த வலியுறுத்தியும், கிராஜுட்டி பனிக்கொடை உச்ச வரம்பை உயர்த்த வலியுறுத்தியும் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.
கனரா வங்கியை சேர்ந்த சுபாஷ், இந்தியன் வங்கியைச் சேர்ந்த சந்திர சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கனரா வங்கியைச் சேர்ந்த செல்ல துரை நன்றி தெரிவித்தார்.




