Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கொட்டும் மழையில் பவுர்ணமி கிரிவலம்

பாடாலூர், ஆக. 28: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலை மீது அமைந்துள்ளது. இங்கு ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று மாலை நடைபெற்றது. கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் மலையைச் சுற்றி அரோகரா, அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இதேபோல் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் உள்ள பூ மலை சஞ்சீவிராயர் மலைக்கோயிலிலும் நேற்று மாலை கிரிவலம் நடந்தது.

முன்னதாக மாலை 5 மணிக்கு மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் கையில் தேங்காய், பூ, பழங்களுடன் மலையை சுற்றி கோவிந்தா கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் கிரிவலம் வந்தனர். கிரிவலத்தில் பாடாலூர், திருவிளக்குறிச்சி, தெரணி, காரை, விஜயகோலபுரம், புதுக்குறிச்சி, நாரணமங்கலம், மருதடி, இரூர், சீதேவிமங்கலம், கூத்தனூர், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.