Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துறையூர் - பெரம்பலூர் நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனில் கன்டெய்னர் லாரி மோதி கவிழ்ந்தது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

பெரம்பலூர்,மே 28: பெரம்பலூர் அருகே டயர்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்து. நாமக்கல்லில் இருந்து நேற்று முன்தினம் இரவு டயர்களை ஏற்றிய கன்டெய்னர் லாரி துறையூர், பெரம்பலூர் வழியாக சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல், காலி செட்டிபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மனோஜ் (31) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக நாமக்கல்லைச் சேர்ந்த ராம்கி என்பவர் லாரியில் இருந்தார்.

இந்த லாரி நேற்று (27ம் தேதி) அதிகாலை 3மணிக்கு துறையூர்-பெரம்பலூர் நெடுஞ் சாலையில், பெரம்பலூர் ரூரல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட செஞ்சேரி பகுதியில் செட்டிக்குளம் பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கவனக் குறைவால், நெடுஞ் சாலையின் சென்டர் மீடியனில் ஏறியதால் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் இருவரும் காயங்கள் ஏதுமின்றி தப்பினர். சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.