Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலையூர் கண்டியங்கொல்லை பகுதியில் புதிய பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

ஜெயங்கொண்டம், பிப்.28: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆண்டிமடம் ஒன்றியம் இலையூர்-கண்டியங்கொல்லை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பகுதி நேர நியாய விலைக்கடையை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, உணவு பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புச்செல்வன் (வ.ஊ), அருள்சாமி (கி.ஊ), கூட்டுறவு சார்பதிவாளர் மணிபாரதி, ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கலியபெருமாள், ஆண்டிமடம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், திமுக தோழர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.