Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரும் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர், ஜன. 28: பெரம்பலூர் மாவட்ட மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர்அலுவலகக் கூட்ட அரங்கில், கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இதில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாய நலத் திட்டங்கள் பற்றிய முறையீடுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். அன்றைய தினம் விவசயிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.