Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பாடாலூர் அரசு பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பாடாலூர், ஆக. 26: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் (பொ) சங்கரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராமராஜ் கலந்து கொண்டு போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். அப்போது போதைப்பொருளால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கிவிடும்.

மாணவர்கள் படிப்பில் மட்டுமே ஆர்வம் செலுத்த வேண்டும். படித்து உலகிலே சிறந்த மனிதர்களாக மாற வேண்டும். உங்கள் அருகே யாரேனும் போதைப்பொருட்களை பயன்படுத்தினால், உடனே அங்கிருந்து கடந்துவிடுங்கள். படிக்கும் வயதில் போதை பழக்கத்திற்கு செல்வதை முற்றிலும், தவிர்த்தால் உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும். இக்கருத்தரங்கில் உதவி தலைமையாசிரியர் சுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். முன்னதாக ஆசிரியர் ராஜேஷ் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ஆனந்தி நன்றி கூறினார்.