Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வரும் 28ம் தேதி நடக்கிறது காஸ் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர், ஆக. 26: பெரம்பலூர் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளைமறுநாள் 28ஆம்தேதி நடைபெறவுள்ளது.இதுகுறித்து கலெக்டர் ஷரண்யா அறி கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, நுகர்வோர்கள் பதிவுசெய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எரிவாயு முகவர்கள் மீது வரப்பெற்ற புகார் மனுக்கள் மீது எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து, எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் 28ஆம்தேதி மாலை 04 மணியளவில் பெரம்பலூர், மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள் எரிவாயு சம்பந்தமாக குறைகள் இருப்பின் மேற்படி, கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என்றும், எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் களைவது தொடர்பாக ஆலோசனை வழங்கலாமென தெரிவித்தார்.