பாடாலூர், ஆக 26: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக நேற்று பாடாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன் பேரில் எஸ்எஸ்ஐ ஜெயக்குமார் மற்றும் போலீசார்கள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா போரூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ராமைய்யா (55) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 6 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.



