Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வர இருக்கிற உள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி 200 வார்டுகளில் போட்டி: பெரம்பலூர் செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை

பெரம்பலூர்,மே 18: வர இருக்கிற உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டத்தில் 200 வார்டுகளில் போட்டியிடுவது என பெரம்பலூரில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. எஸ்டிபிஐ கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழுக்கூட்டம் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் முஹம்மது ரபீக் வரவேற்றார்.

மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட பொதுச்செயலாளர் சையது அபுதாஹிர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ஷபீக் அஹமது கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் கனி, மாவட்ட செயலாளர்கள் அபூபக்கர் சித்தீக், அஸ்கர் அலி, மாவட்ட பொருளாளர் முஹைதீன் பாரூக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது, குன்னம் தொகுதி தலைவர் அப்துல் முத்தலிப், பெரம்பலூர் தொகுதி நிர்வாகிகள் ஜியாவுதீன், நகர நிர்வாகிகள் இக்பால், சஹாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி செய்த களப் பணிகள் குறித்தும், வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் பங்களிப்பு குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. மேலும் பெரம்பலூர், குன்னம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 200 வார்டுகளில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முடிவில் மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது பாரூக் நன்றி கூறினார்.