Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாடாலூர் பகுதியில் இன்று மின்தடை

பாடாலூர், மே 18: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கட்கிழமை (மே.18) மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று (18-ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர்கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூர், திருவளக்குறிச்சி, கூத்தனூர், சீதேவிமங்கலம் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.