Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பெரம்பலூரில் ஹாக்கி விளையாட்டு போட்டி

பெரம்பலூர், ஜூலை 16: பெரம்பலூரில் குறுவட்ட அளவிலுள்ள பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று பெரம்பலூர் குறுவட்ட அளவில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளுக்கான ஹாக்கி விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. 14 வயதிற்கு உட்பட்ட, 17 வயதிற்கு உட்பட்ட, 19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த ஹாக்கி விளையாட்டு போட்டியில், பெரம்பலூர் குறுவட்ட அளவிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள் ஹாக்கி அணிகள் பங்கேற்றன.

போட்டிக்கான ஏற்பாடுகளை குறுவட்ட இணை செயலாளர்களான, பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் வெர்ஜினியா சினேகா, கிருபாமேரி ஆகியோர் செய்திருந்தனர். போட்டிகளை உடற்கல்வி இயக்குனர்கள் தனபால், விஜயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் மேலப்புலியூர் அரசு மேல் நிலைப்பள்ளி முதலிடமும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி 2ம் இடமும் பெற்றன.

17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் மேலப்புலியூர் அரசு மேல் நிலைப் பள்ளி முதலிடமும், சிறுவாச்சூர் அரசு மேல் நிலைப்பள்ளி 2ம் இடமும் பெற்றன. 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் சிறுவாச்சூர் அரசு மேல் நிலைப்பள்ளி முதலிடமும், பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2ம் இடமும் பெற்றன. போட்டி நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் தங்கவேல், ரவி, அசோக், சரவணன், கரிகாலன், பிரேம், ஸ்டான்லி, கவிதா ஆகியோர் நடத்தினர்.