Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெரம்பலூர் - வேப்பந்தட்டையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜூலை 16: பெரம்பலூர், வேப்பந்தட்டை பகுதிகளில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில்- பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் (TNRDOA) சார்பில், பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்காவின் முன்பு நேற்று மதியம் 1:30 மணிக்கு 5 பெண்கள் உள்பட 18 பேர்களும், பெரம்பலூர், துறைமங்கலம் பகுதியில் இயங்கி வரும் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று மதியம் 3 மணியளவில் 17 பெண்கள் உள்பட 27 பேர்களும், பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கண்ட 2 இடங்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். இதேபோல் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது குறிப்பிடத் தக்கது.