Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பெரம்பலூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

பெரம்பலூர், ஜூலை 15: பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும், பெரம்பலூர் நகர் பகுதிகளான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதன கோபாலபுரம், துறைமங்கலம், மின் நகர், நான்கு ரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி, வடக்கு மாதவி சாலை, சிட்கோ, துறையூர் சாலை,

அரசு தலைமை மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணா நகர், கே.கே நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, அருமடல், அருமடல் ரோடும் எளம்பலூர் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9:30 மணிமுதல் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படும் என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.