Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் அழகு முத்துகோன் குருபூஜை

பெரம்பலூர், ஜூலை 15: பெரம்பலுார் வெங்கடேசபுரத்தில் ஸ்ரீ முத்தையா கல்வி அறக்கட்டளை அலுவலக கூட்டரங்கில் ஆயர் மக்கள் பேரவை சார்பில் சுதந்திரப் போராட்ட வீரரும், மாமன்னருமான வீர அழகு முத்துகோனின் 269-வது குருபூஜை விழா நேற்று நடந்தது.

ஆயர் மக்கள் பேரவை நிறுவனர் முத்தையா தலைமை வகித்து பேசுகையில், ‘ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக முதன்முதலில் சுதந்திரக் குரல் ‘எழுப்பிய மாவீரர் அழகுமுத்துகோனின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றும் வகையில் இந்த குருபூஜை விழா நடத் தப்படுகிறது’ என்றார்.

நிர்வாகிகள் ராஜ மாணிக்கம், டாக்டர் திலீபன், முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ சிவக்குமார் கலந்து கொண்டுஅழகுமுத்துகோன் படத் திற்கு மரியாதை செலுத்தி பேசுகையில், ‘பெரம்பலுார் பாலக்கரையில் மாவீரன் அழகுமுத்து கோன் உருவ சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆடு, மாடு வளர்ப்போர் நல வாரியம் அமைக்க தமிழக அரசிடம் வலியுறுத்து வேன்’ என்றார்.

விழாவில் நிர்வாகிகள் பொன்முத்துசாமி, ஜெயராமன், ராஜ் மோகன், கோவிந்தசாமி, வெங்கடேஷ், சுரேஷ், மல்லிகா, சங்கீதா உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை நிர்வா கிகள் திருவள்ளுவர், சித்ரா செய்திருந்தனர்.  பொறுப்பாளர்கள் பிரபாகரன் வர வேற்றார். முத்துக்குமார் நன்றி கூறினார்.