Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவு குறித்து விழிப்புணர்வு

ஜெயங்கொண்டம், பிப்.14: அரியலூர் மற்றும் கீழப்பழுவூரில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு, போதை பொருட்களால் ஏற்படும் விளைவு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் கீழப்பழூவூர் மற்றும் அரியலூர் பேருந்து நிலையம், அண்ணாசிலை ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் போதைப் பொருட்களால் உடல் நலத்திற்கும், சமூக நலத்திற்கும் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினர்.