Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேப்பூரில் ஒன்றிய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

குன்னம், பிப்.14: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் பஸ் நிலையத்தில் வேப்பூர் ஒன்றிய திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்தும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, வேப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்ட துணை செயலாளர் சன் சம்பத், லப்பைக்குடிக்காடு கழக செயலாளர் ஜாஹிர் உசேன், மாவட்ட மருத்துவமனை அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், குன்னம் தொகுதி மேற்பார்வையாளர் ஏகே அருண் காங்கிரஸ், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விசிக மாவட்ட செயலாளர் அன்பானந்தன் சிபிஎம் மாவட்ட செயலாளர் ரமேஷ், மதிமுக ஒன்றிய செயலாளர் ரங்கராஜ், விசிக ஒன்றிய செயலாளர் வரதராஜன் உட்பட பலர் கண்டன உரையாற்றினர். முடிவில் வேப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு நீலமேகம் நன்றி உரையாற்றினார்.