Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ரவுண்டானாவில் புற்கள் பதித்து அழகுபடுத்தும் பணி

பெரம்பலூர், பிப்.14: பெரம்பலூர் கலெக்டர் அலுவலக ரவுண்டானா அழகுபடுத்தும் பணி, வாட்டர் ஸ்பிரிங்லர் வசதியுடன் புற்கள் பதிக்கும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் போர்டிகோ முன்புள்ள ரவுண்டானா பகுதியில் பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலை துறை சார்பாக வாட்டர் ஸ்பிரிங்லர் வசதியுடன், புற்கள் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பு ரவுண்டானத பகுதி வெறுமனே புற்கள் பதித்து அழகுபடுத்தப்படுவதோடு விட்டு விடுவார்கள். இதனால் சில மாதங்களிலேயே போதிய தண்ணீர் வசதியின்றி புற்கள் காய்ந்து விடும். இதற்கு நல்லதொரு தீர்வாக இப்போது முதல்முறையாக வாட்டர் ஸ்பிரிங்லர் வசதியுடன் புற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் புற்கள் பசுமையாக காணப்படுவதோடு அதனைச் சுற்றியுள்ள பகுதியே குளிர்ச்சியாகவும் கண்களுக்கு ரம்யமாகவும் காட்சி தரும் என்பதால் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தோட்டக் கலைத்துறையின் பணிகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.