ஜெயங்கொண்டம், நவ.13: ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. அரியலூர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரிலும், ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ஆலோசனையின் பேரிலும் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் நிலையங்களில் பெட்டிஷன் மேளா ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
பெட்டிஷன் மேளாவில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், உரிய நபர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டு பல்வேறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. தொடர்ந்து, நடைபெறும் பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களுடைய வழக்குகள் விசாரணைக்கு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
