Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லாரியில் எம்.சாண்ட் கடத்திய டிரைவர் சிறையில் அடைப்பு

பாடாலூர், ஜூன் 13: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள சில கிரஷர்களில் அனுமதியின்றி எம்.சாண்ட் (மணல்) ஏற்றி செல்வதாக ஆர்டிஓ அனிதாவிற்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் அவர் ஆலத்தூர் தாலுகா பகுதியில் தீவிர ஆய்வு பணிகள் மேற்கொண்டார். இந்தநிலையில் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம்-கூத்தனூர் செல்லும் சாலையில் லாரி ஒன்று செட்டிகுளம் வழியாக செஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது செட்டிகுளம் பகுதியில் வாகன சோதனையில், ஈடுபட்டிருந்த பெரம்பலூர் ஆர்டிஓ அனிதா லாரியை வழிமறித்து ஆய்வு செய்தார்.

அப்போது உரிய ஆவணம் இன்றி மணல் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து எம்.சாண்டுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்ட்டது. இது சம்பந்தமாக செட்டிகுளம் கிராம நிர்வாக அலுவலர் அசேன் பாட்ஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்தது பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக்(28) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.