Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் ரத்த தானம்

பெரம்பலூர், ஜூன் 13: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணைந்து நடத்திய அரசு அலுவலர்களுக்கான இரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஷரண்யா அறி இரத்த தானம் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

இரத்த தான முகாமில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் காவல்துறையினர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இதில் மாவட்ட கலெக்டர், அலுவலர்கள், பணியாளர்கள் என மொத்தம் 50க்கும் மேற்பட்ட நபர்கள் பல உயிர்களை காக்கும் வகையில் ரத்ததானம் அளித்தனர்.

இம்முகாமில் இரத்த தானம் வழங்கிய அரசு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்த தானம் வழங்கும் அலுவலர்களிடம் இதற்கு முன்னர் இரத்த தானம் எத்தனை முறை, எப்போது, வழங்கியுள்ளீர்கள், உடல்நிலை சீராக உள்ளதா, இரத்தத்தில் சர்க்கரை அளவு, உயர் இரத்த அழுத்தம் எடையளவு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.