Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீழப்பழுவூரில் பள்ளி மாணவர்களுக்கு வேளாண் கல்வி விழிப்புணர்வு

ஜெயங்கொண்டம், பிப்.13: பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மாணவிகள், கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேளாண் கல்வி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வேளாண் கல்வியின் முக்கியத்துவம் பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன வேளாண் கல்வியின் அவசியம் பற்றி விளக்கப்பட்டது.

வேளாண்மையில் ட்ரோன் தொழில்நுட்பம், துல்லியப் பண்ணையம் மற்றும் உலகளாவிய வேளாண் ஆராய்ச்சித் துறையில் உள்ள பிரம்மாண்ட வாய்ப்புகள் குறித்துஎடுத்துரைக்கப்பட்டன. வேளாண் கல்லூரியில் சேர்க்கை முறைகள் குறித்து விளக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 12-ம் வகுப்பு கட்-ஆப் (உயிரியல்/வேளாண்மை + இயற்பியல் + வேதியல்) அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

மத்திய அரசு கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு இட ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு மற்றும் விவசாயிகளின் வாரிசுகளுக்கான சலுகைகள் குறித்து வழிகாட்டப்பட்டது. வேலை வாய்ப்புகள் வேளாண்மை அலுவலர், வங்கி அதிகாரி , விதை சான்று அலுவலர் மற்றும் சுயதொழில் முனைவோர் வாய்ப்புகள் குறித்து விளக்கப்பட்டது.