ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய ஆதார் சேவை மையம் திறப்பு
பாடாலூர், நவ.12: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களின் தேவை கருதி புதிதாக ஆதார் சேவை மையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த ஆதார் சேவை மையத்தில் எழுத்து பிழை, முகவரி, பிறந்த தேதி, தொலைப்பேசி, மின்னஞ்சல் மாற்றம், புதிய ஆதார் பதிவு, 5 முதல் 15 வயதுக்கு கட்டாய கருவிழி, கைரேவை பதிவு ஆதார் நிலை அறிதல், புகைப்படம், ஆதார் ஆவணங்கள் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் உடனுக்குடன் பெறலாம்.
புதிய ஆதார் பதிவு, 5 முதல் 7 வயது, 15 முதல் 17 வயதுக்கான கட்டாய கருவிழி, கைரேவை பதிவு, ஆதார் நிலை அறிதல் ஆகியவற்றிற்கு கட்டணம் இல்லை. பெயர், பிறந்த தேதி, இனம், முகவரி, தொலைப்பேசி, மின்னஞ்சல் மாற்றம் செய்ய ரூ.75, புகைப்படம், கைரேகை, கருவிழி புதுப்பித்தலுக்கு ரூ.125, ஆதாரில் ஆவணங்கள் புதுப்பித்தலுக்கு ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ஆதார் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.