Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பாடாலூர், ஜூன் 11: திருச்சி மாவட்டம் துறையூர், கிழக்கில் அரியலூர் அல்லிநகரம் என 50 கி.மீட்டருக்கு மேல் இருப்பதால் பொதுமக்கள் கோரிக்கைகள், நலத்திட்ட உதவிகள் பெற நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதாலும், போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதாலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே இவ் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து எலந்தலப்பட்டி, து.களத்தூர், நக்கசேலம், சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, தேனூர்,

கண்ணப்பாடி, செட்டிகுளம், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், இரூர், பாடாலூர் ஆகிய 13 ஊராட்சிகளை உள்ளடக்கி ஆலத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம், தெரணி, காரை, சாத்தனூர், சிறுகன்பூர், வரகுபாடி, ஆதனூர், கொட்டரை, குரும்பாபாளையம், பிலிமிசை, கீழமாத்தூர், மேலமாத்தூர்,

அல்லிநகரம், இலந்தங்குழி, ஜெமீன் பேரையூர், அருணகிரிமங்கலம், புஜங்கராயநல்லூர், கூத்தூர், கூடலூர், கொளத்தூர், அயினாபுரம், கொளக்காநத்தம், சில்லக்குடி, திம்மூர், நொச்சிக்குளம், ராமலிங்கபுரம், ஜெமீன் ஆத்தூர் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய கொளக்காநத்தம் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்