Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழு அறை

பெரம்பலூர்,ஏப்.9: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான குன்னம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அமர் பகதூர் சிங் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு அறையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு அறையில் தேர்தல் விளம்பரங்கள், சமூக ஊடகப் பதிவுகள் முறையாக கண்காணிக்கப்படுகிறதா என்றும்,

ஊடகச் சான்றிதழ் விநியோகம் போன்றவை சரியாகக் வழங்கப்படுகிறதா என்று பதிவேடுகளையும் ஆவணங்களையும் பார்வையிட்ட குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் விளம்பரங்களுக்குச் சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.

பணம் செலுத்தி வெளியிடப்படும் செய்திகள் ஏதேனும் உள்ளதா என்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும் எனவும், பதிவு செய்யப்படும் விளம்பரங்களுக்கு முறையாக சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும், கட்டணச் செய்திகள் (Paid News) குறித்து முறையாக கண்காணித்து அறிக்கை அனுப்பிட வேண்டும் எனவும், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தேர்தல் தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் எனவும் சம்பந்தப் பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.