Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குன்னம் கிராமத்தில் தேவையற்ற டயர்கள் அகற்றம்

குன்னம், ஆக. 8: குன்னம் கிராமத்தில் சுகாதாரத் துறை சார்பில் தேவையற்ற டயர்கள் மற்றும் பொருட்கள் அகற்றும் பணி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாரம் குன்னம் கிராமத்தில் பொதுசுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக தேவையற்ற டயர்கள் மற்றும் இதரப் பொருட்களை அகற்றும் பணி நடைபெற்றது. டெங்கு கொசு ஒழிப்பு திட்டத்தின் கீழ் கிராம பகுதியில் உள்ள தேவையற்ற டயர்கள் மற்றும் பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி மாவட்ட சுகாதார அலுவலர் .மரு. கீதா உத்தரவின்படி மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வட்டார மருத்துவ அலுவலர் மரு.சேசு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்தர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் குமரேசன், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் குன்னம் கிராம பகுதியில் உள்ள ஓலைப்பாடி கோவிந்தராஜ பட்டினம் கல்லை உள்ளிட்ட கிராமங்களில் தெருத் தெருவாக சென்று அனைத்து பகுதிகளிலும் இருந்த பழைய டயர்கள் மற்றும் பொருட்களை அகற்றினார்.

மேலும் கிராம மக்களுக்கு வரும் மழைக் காலங்களில் வீடு மற்றும் தெருக்களில் மழைக்காலங்களில் டயர் மற்றும் பொருட்களில் தண்ணீர் சேராமல் பார்த்துக் கொள்ளவும் டெங்கு, கொசு உற்பத்தியாகமல் தடுக்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.