பாடாலூர், ஆக 7: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நேற்று நடைபெற்றது. இந்த கோயிலில் மாதந்தோறும் நடக்கும் கிருத்திகை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை வழிபடுவது வழக்கம்.
ஆடி மாத கிருத்திகை விழாவையொட்டி மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
பின்னர் மலைக்கோயிலை சுற்றி வெள்ளி தேர் இழுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், பொம்மனப்பாடி, மாவலிங்கை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



