Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவு 11ம் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர்,மே 6: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை கடந்த 4ஆம் தேதி நடைபெற்றதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி மாலை இதற்கான அறிவிப்பை வெளியிட்ட நேரம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு மே மாதம் 6ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த காலத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், கேஸ்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், ஓய்வு பெற்றோர் குறைதீர்க்கும் கூட்டம், முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம், மக்களைத் தேடி மருத்துவ முகாம், வருவாய்த்துறை சார்பாக நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்கள் நலன் சார்ந்த சிறப்பு முகாம்களும் இனிமேல் தொடர்ந்து நடைபெறும்.

ஒவ்வொரு திங்கள்கிழமையும் தொடர்ந்து பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் எனவே வருகிற 11-ம் தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமும், வருகிற 13 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனுக்கள் முகாமும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.