தா.பழூர், ஆக. 5: தா.பழூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மரங்கள் நடப்பட்டது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு வீ த லீடர்ஸ் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் தா.பழுரில் பேருந்து நிறுத்தம், அருச மேல் நிலைபள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சி ராம செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் தா.பழூர் பகுதியில் உள்ள குறைகளைக்களைய வேண்டும், பொதுமக்களுக்கு பொது கழிப்பறை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவல் நிலையத்தில் மனு அளித்தனர். இந்நிகழ்வில் சந்திரா, மூவேந்தன், ஞானசேகரன், பெருமாள், சுடரொளி, முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவில் சரவணன் நன்றி கூறினார்.


