Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாட்டார்மங்கலம் பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் கோயில் வருடாபிஷேகம்

பாடாலூர், பிப்.5: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பச்சாயி அம்மன், ஸ்ரீ மன்னார் ஈஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயில்களில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்தது. திருப்பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து கடந்தாண்டு 2025 ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் நாட்டார்மங்கலம், ஈச்சங்காடு, மருதடி, நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், ஆலத்தூர்கேட், இரூர், திருவளக்குறிச்சி, பாடாலூர், கூத்தனூர், செட்டிகுளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர் பாலு.ராஜேஷ் (பூசாரி), கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள், குடிப்பாட்டு மக்கள் செய்திருந்தனர்.