Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கொத்தவாசல் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

குன்னம், ஜன. 5: கொத்தவசால் கிராம பொதுமக்களுக்கு இலவச பொது மருத்துவம் முகாம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கொத்தவாசல் கிராமத்தில் அருண் மருத்துவமனை மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் மருத்துவர் கொளஞ்சிநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கொத்தவாசல் கிராமத்தை சுற்றியுள்ள புதுகுடிசை கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

பொது மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இசிஜி பரிசோதனைகள் செய்யப்பட்டன. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் காய்ச்சல், இருமல், சளியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கினர். 10 நபர்களுக்கு வாக்கர் மற்றும் வாக்கிங் ஸ்டிக் மற்றும் 3 நபருக்கு மூன்றுசக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.