குன்னம், நவ. 4: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூரில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், ஒன்றிய அரசும், தமிழ் நாடு மாநில அரசும் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேப்பூர் பேருந்து நிலையத்தில் ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் தலைமையில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் கிளை செயலாளர்கள் முத்துசாமி, கிளியூர் செல்லையா, வட்டகுழு உறுப்பினர் சின்னம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜசேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்து ஒன்றிய குழு உறுப்பினர் இலக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் செந்தமிழ்ச்செல்வி ராஜ்குமார், கணபதி, அருள், நல்லதம்பி, அமுதா, பௌஜியா பேகம், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்கள்.


