Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் அதிகரித்து வரும் சுகாதார பிரச்சினைகள்

குன்னம், நவ. 4: பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் மாடுகள், தெருநாய்கள் மற்றும் பன்றிகளின் தொல்லைகள், கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக, பொதுமக்களின் நலன் கருதி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நகரச் செயலாளர் முகமது இம்ரான் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகியோரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் மீது பேரூராட்சி நிர்வாகம் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில், பொதுமக்களின் நலன் கருதி கட்சியின் சார்பில் ஜனநாயக வழிமுறையில் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பதைத் தெரிவித்தனர்.