Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் சிபிஎம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், நவ. 4: பெரம்பலூரில் அரிசி பருப்பு சர்க்கரை எண்ணை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பஸ்டாண்டு காந்தி சிலை முன்பு, நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் நகரக்குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், ஒன்றிய மாநில அரசுகள் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் கருணாநிதி தலைமை வகித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகஸ்டின், கலையரசி, ரெங்க நாதன், மாவட்டக் குழு உறுப்பினர் எட்வின், ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ண குமார், மணி, சந்திரன், ரெங்க ராஜ், குணசேகரன், கிளைச் செயலாளர்கள் பரமசிவம், காளீஸ்வரன் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 30 பேர்கள் கலந்து கொண்டனர்.