Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

அண்ணா நினைவு நாள் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு அதிமுகவினர் மரியாதை

பெரம்பலூர், பிப்.4: பெரம்பலூரில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பாக அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் 57 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் நுழைவுவாயில் பகுதியில் உள்ள அண்ணா, தந்தை பெரியார், ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரது உருவ சிலைகளுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம், முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, மாவட்ட நிர்வாகிகள் மருவத்தூர் ராஜாராம், ராணி, ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், நகரச் செயலாளர் ராஜ பூபதி, முன்னாள் நகராட்சி தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.