Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

நாட்டார்மங்கலத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நினைவு பரிசு வழங்கி கவுரவிப்பு

பாடாலூர், ஆக 1: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது. அவர் 18வருடங்கள் கல்விப்பணி புரிந்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டாமங்கலம் கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 18 வருடங்கள் பணி புரிந்தவர் முத்துசாமி. இவர் நேற்று பணி ஓய்வு பெற்றார்.

இதையடுத்து அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை சுசீலா தலைமை வகித்தார். அனைவரையும் ஆசிரியர் செந்தில்ராஜா வரவேற்று பேசினார். பள்ளியின் சார்பாக நினைவு பரிசு வழங்கி வாழ்த்தி பேசி முத்துசாமிக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

இறுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்துசாமி ஏற்புரை வழங்கினார். இதில் ஆசிரியர்கள் அருணா, செல்வராணி, ஜெயக்கொடி, பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி தன்னார்வலர்கள், கிராம பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பாரதிதாசன் நன்றி கூறினார்.