Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் உழவாரப்பணி: ஐயப்ப சேவா சங்கத்தினர் பங்கேற்பு

பெரம்பலூர், மே 1: பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தன்னார்வ தொண்டர்களால் உழவாரப்பணி நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று அகில இந்திய பாரத ஐயப்ப சேவா சங்கத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் சிவனடியார்கள் 20க்கும் மேற்பட்டோர் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.

கண்ணன் தலைமையில், திருக்கோவில் பணியாளர்களுடன் இணைந்து நடைபெற்ற இந்த உழவாரப்பணியில், ஆலயம் முழுவதும் தூசுகள் அகற்றப்பட்டு, சுவாமி புறப்பாடு வாகனங்கதூய்மை செய்யும் பணி நடைபெற்றது. மேலும், கோயில் முழுவதும் தண்ணீர் ஊற்றி கழுவி தூய்மை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தைச் சேர்ந்த நடராஜன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.