Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஓவிய போட்டியில் மாணவ, மாணவிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி வயலில் தோட்டக்கலை அலுவலர்கள் கள ஆய்வு

பெரம்பலூர், செப். 30: மரவள்ளி கிழங்கு சாகுபடி வயலில் தோட்டக்கலை அலுவலர்கள் கள ஆய்வு செய்தனர். இதில் செம்பேன், இளஞ்சிவப்புநிற மாவுப்பூச்சி தாக்குதல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், மலையாளப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மர வள்ளிக்கிழங்கு பயிரிடப் பட்டுள்ள கிராமங்களில் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் தோட்டக்கலை அலு வலர்கள் கள ஆய்வு மேற் கொண்டதில் செம்பேன் மற்றும் இளஞ்சிவப்புநிற மாவுப்பூச்சி தாக்குதல் அதி கமாக இருப் பதாகக் கண்ட றியப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை வட் டாரத்தில் 100 ஏக்கருக்கு மேல் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப் பட்டுள்ளது. கடந்த 27ஆம்தேதி நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க் கும் நாள் கூட்டத்தில் மர வள்ளிக் கிழங்கு செடியில் பூச்சியின் தாக்குதல் அதிக மாக இருப்பதாக விவசாயி களான் மூலமாக பெரம்ப லூர் மாவட்ட நிர்வாகத் திற்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாடு அரசு தோட்டக் கலைத் துறை மற்றும் பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும், வேளாண் அறி வியல் மையம் இணைந்து, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத் தில் உள்ள மலையாளப் பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மரவள்ளிக் கிழங்கு பயிரிடப் பட்டுள்ள கிராமங்களில் களஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் முடிவில் மரவள்ளிக் கிழங்கு செடியில் செம்பேன் (Red spider mite) மற்றும் இளஞ் சிவப்பு நிற மாவுப்பூச்சி (Pink Mealybug) தாக்குதல் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இந்தப் பூச்சிகளின் தாக்குதல் குறிப்பாக தாய்லாந்து வெள்ளை மற்றும் எம்-4 ஆகிய இரகங்களில் மிக அதிகமாகவும், ஏத்தாப்பூர் இரகத்தில் தாக்குதல் குறைவாகவும் காணப் பட்டது. திடீரென்று இந்த பூச்சிகளின் தாக்குதல் அதிகரிப்பதற்கு காரணம், மாறி வரும் பருவ நிலை மாற்றம், அதாவது கடந்த சில வாரங்களாக வெப்ப நிலை அதிகரித்து காற்றில் ஈரப்பதம் குறைந்ததனால் இந்த பூச்சிகள் பெருகுவ தற்கான ஏற்ற சூழ்நிலை உருவானது.

இதுவே இவ்வகை பாதிப் பிற்கு காரணம். இந்தப் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை விவசாயிகளுக்கு எடுத்து ரைக்கப்பட்டது. செம்பேனை கட்டுப்படுத்த ஸ்பைரோமெசிபன் (Spiromesifen 22.9%) என்ற பூச்சிக் கொல்லியினை ஏக்கருக்கு 100-120 மில்லி என்ற அளவில், 200 வீட்டர் தண்ணில் கலந்து தெளிக்க வேண்டும். இளஞ்சிவப்பு நிற மாவுப் பூச்சி தாக்குதலை கட்டுப் படுத்த ப்ளோனிக்கமைடு (flonicamid 50% WG) என்ற பூச்சிக் கொல்லியினை ஏக்கருக்கு 40 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் தண் ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இந்தக் கள ஆய்வில் வேளாண் அறிவியல் மையை தொழில்நுட்ப வல்லுநர்(பயிர் பாதுக்காப்பு) தோம்னிக் மனோஜ், வேப்பந்தட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் விஜய காண்டீபன் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். வேளாண் அறிவியல் மையத்தின் மூலமாக மரவள்ளிக் கிழங்கில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்றத் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பாக விவசாயி கள் தொடர்புகொள்ள, தொழில்நுட்ப வல்லுநர் தோம்னிக் மனோஜ் என்பவரை 9843611167 என்றத் தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.