Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிதி உதவி பெறும் பயனாளிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டும்

அரியலூர், செப்.25: அரியலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவில் முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியத் திட்டங்களில் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகளுக்கு இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி, செப்டம்பர் 2026 மாதம் முதல் ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இம்மாதம் முதல் பயனாளிகளுக்கான நிதி உதவி அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் முறையான நடவடிக்கைகள் மூலம் நிதியுதவி தடையின்றி சென்றடைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இதுவரை இணைக்கப்படாத பயனாளிகள் தங்களது வங்கியை அணுகி ஆதார் இணைப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் அலுவலகம் (அறை எண்.3) மற்றும் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் உள்ள சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை பயனாளிகள் அணுகலாம். அங்கு தேவையான வழிகாட்டுதலும் உதவியும் வழங்கப்படும்.ஒவ்வொரு பயனாளிக்கும் நிதி உதவி எவ்வித இடையூறும் இன்றி சீராக சென்றடைவதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தெரிவித்துள்ளார்.