Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டி.கீரனூரில் நிலம் இல்லாதவர்களுக்கு; இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்

பெரம்பலூர், நவ. 3: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில், நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அப்துல்ராசிக் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு, குன்னம் தாலுகா, வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், திருமாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: எங்கள் கிராமத்தில் 250 குடும்பங்களும், 1,180 வாக்காளர்களும், 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகிறோம் எங்கள் ஊரைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட தனியார் நில உரிமை பெற்று, விற்பனைக்கென மனைப்பிரிவுகள் பல பெயர்களில் உருவாக்கி, விற்று வருவதோடு எங்கள் கிராமத்திற்குச் சொந்தமான அரசு புறம்போக்கு மற்றும் நத்தம் புறம்போக்கு நிலங்கள், தரிசு நிலங்கள், இன்னும் இதர வகை நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

இந்த புறம்போக்கு நிலங்களில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த யாராவது வேண்டி குடிசையா கொட்டகையோ அமைத்தால் அவர்களை உடனே அப்பகுதியை உரிமை கொண்டாடும் தனியார் நில உரிமையாளர்கள் அகற்றி விடுகின்றனர்.  எனவே பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் இதுதொடர்பாக வருவாய்த்துறையினர் மூலம் கள ஆய்வுக்கு உட்படுத்தி, ஆக்கிரமிப்பாளர்கள் மீது விரைந்து நடவடிக்கைஎடுத்து, எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏழை மக்களுக்கு அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவில் தெரிவித்தனர்.