Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எளம்பலூர் பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் 6ஆம் ஆண்டு குருபூஜை விழா

பெரம்பலூர்,ஜூலை 31: எளம்பலூர் பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் 6ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் நீதிபதிகள், கருணாநிதி, நந்தினிதேவி, எஸ்பி இராஜாராம் ஆகியோர் பங்கேற்றனர். பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரம்மரிஷி மலையில் ஶ்ரீலஶ்ரீ புலிப்பாணி அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகளின் 6வது ஆண்டு குருபூஜை விழா நேற்று (30ஆம்தேதி) நடைபெற்றது. இதனையொட்டி காலை ஶ்ரீ காகன்னை ஈஸ்வரர் ஆலயத்தில் திருப்பள்ளி எழுச்சி, திருவடிப் புகழ்ச்சி, திருவருட்பா, அகவல் பாராயணம், கோமாதா பூஜை, மங்கள இசைக்கச்சேரி, சிவ பூதகண வாத்திய இசைக் கச்சேரி, தேவாரம், திருவாசகம் பாராயணமும், உலகை ஆளும் 210 மகா சித்தர்கள் யாகமும் நடந்தது.

மகா சித்தர்கள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மாதாஜி ரோகிணி ராஜ்குமார் தலைமையில், தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா, கிஷோர்குமார், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எஸ்பி இராஜாராம், சிங்கப்பூர் குரு கடாக்ஷம் மெய்யன்பர்கள் முன்னிலை வகித்தனர். இதில் சமீபத்தில் மத்திய அரசின் பத்மஶ்ரீ விருது பெற்ற திருத்தணி சுவாமிநாதனுக்கு சிறப்பு மரியாதை செய்து, பின் 500க் கும் மேற்பட்ட சாது, சந்நியாசிகளுக்கு வஸ்திர தானமும், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்ன தானமும் வழங்கப்பட்டது. மேலும் 15 உடல் ஊனமுற்றோருக்கு இலவச சக்கர நாற்காலிகள், எளம்பலூர் அரசு பள்ளியில் 10, 12 ஆம் வகுப்பில் முதல் 3 இடங்கள் படித்த மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டன.

விழாவில் முன்னாள் மாவட்ட நீதிபதியும், தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணைய உறுப்பினருமான கருணாநிதி, கரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி, சிவகாசி தொழிலதிபர் அதிபன் போஸ், வேதா பால் குழு நிர்வாக இயக்குநர் ரமேஷ் நடராஜன், பெரம்பலூர் வள்ளலார் குழும நிர்வாகஇயக்குநர் அரவிந்தன், திட்டக்குடி தொழிலதிபர் பி.டி.ராஜன், கம்போடியா ரமேஷ், ஈரோடு குகன், இன்டேன் கேஸ் குகன் ராஜா, அன்னை சித்தரின் தர்மவான்கள் கலந்து கொண்டனர்.