Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேப்பூர் அரசு கல்லூரியில் சிறுதானிய உணவு திருவிழா

பெரம்பலூர்,செப்.30: வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சௌம்யா தலைமை வகித்து உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கோகில வாணி, அனைத்துத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறுதானியங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், அவற்றிலுள்ள ஊட்டச் சத்துகள் பற்றியும் விரிவாக விளக்கிக்கூறினர்.

பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர். பல்வேறு பாட பிரிவுகளை சேர்ந்த மாணவிகளால் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாரம்பரிய மற்றும் சத்தான உணவு வகைகளை வரிசையாக காட்சிப் படுத்தினர். சிறுதானியங்களின் ஊட்டச் சத்து முக்கியத்துவம், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் அவசியம் மற்றும் பாரம்பரிய உணவு முறைகளைப் பாதுகாப்பதன் தேவை குறித்து சிறப்பு விருந்தினர் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்சிக்கு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.