பெரம்பலூர்,செப்.30: பெரம்பலூர் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் குழுவின் தலைவரான பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்பிஅருண் நேரு, இணை தலைவரான சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி எம்பி திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பெரம்பலூர் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி எம்பியுமான அருண் நேரு தலைமையில், குழுவின் இணைத் தலைவரும், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி எம்பியுமான திருமாவளவன் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அப்துல் ராசிக் வரவேற்றார். மாவட்ட எஸ்பி லலித்குமார், பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

