ஜெயங்கொண்டம், செப்.30: அரியலூர் அண்ணாசிலை அருகேதமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தினர் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊதிய திருத்த ஆணையத்தின் பரிந்துரைகள் பட்டியலில் ஓய்வூதிய திருத்தமும் சேர்க்கப்பட வேண்டும். ஜனவரி 2026க்கு முன்பிருந்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய திருத்தம் உறுதி செய்யப்பட வேண்டும். 8வது ஊதிய திருத்த ஆணையத்தின் பரிந்துரைகள் பெறப்படும் வரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அகவிலைப்படி, அகவிலை நிவாரணத்தில் 50 சதவீதம் அடிப்படை ஊதியம் ஓய்வூதியத்தின் சதவீதத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
கம்யூட்டேஷன் செய்யப்பட்ட ஓய்வூதியத்தொகை 10 ஆண்டுகள் 8 மாதங்களுக்குள் மீகப்படுவதை உறுதி செய்ய வேண்டும். குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு ஓய்வூதியங்களில் சமத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும். பாரப்பட்சமான நடைமுறைகள் நீக்கப்பட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும். ரயில், விமான டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட 50 சதவீதம் கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்பட வேண்டும்.

