Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் நல வாரியத்தில் தகுதியான நபர்கள் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம்

அரியலூர், ஜூன் 30: அரியலூர் மாவட்டத்தில்அரியலூர் கலெக்டர் மிருணாளினி செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் கடந்த 2022ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற கிறித்துவ இனத்தைச் சார்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள், கிறித்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள்,

தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் ஆகியோருக்கு முறையான மாதாந்திர ஊதியம் என்று இல்லாமல் உள்ளிட்ட பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர். மேற்படி நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி www.cwb.tn.gov.in < http://www.cwb.tn.gov.in/ > என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி நல வாரியத்தில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் மிருணாளினி, தெரிவித்துள்ளார்.