Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 546 மனுக்கள் குவிந்தன: துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

பெரம்பலூர், ஜூலை 28: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் டி.ஆர்.ஓ கண்ணன் மனுவை பெற்று விசாரணை நடத்தினார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களின்மீது மூன்று மாதங்களுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்காத மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. கடந்த வாரம் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்களில் உடனடித் தீர்வு கண்ட அலுவலர்களை பாராட்டிய மாவட்டக் கலெக்டர், அனைத்து அலுவலர்களும் தங்கள் துறைசார்ந்த மனுக்கள் மீது எவ்வித காலதாமதமும் இன்றி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, மாற்று திறனாளிகள் உதவித்தொகை தொழில் தொடங்க கடனுதவி, வீட்டு மனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 546 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்டக் கலெக்டர் மற்றும் அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் சுந்தர ராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் வாசுதேவன், தாட்கோ பொது மேலாளர் கவியரசு உள்ளிட்ட அனைத்து துறைகளின் முதல்நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடக்க வேளாண் கூட்டுறவு அலுவலகம் முன் குவிந்தனர்

தேர்தல் அறிக்கையிலும், தனது வாக்குறுதிப்படியும், 17 நிபந்தங்களை கைவிட்டு, கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கியில், விவசாயிகள் வாங்கிய முழு பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.