பாடாலூர், செப். 26: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி சின்னம்மாள் (47). இவர்களுடன் காமராஜின் தாயார் பச்சையம்மாளும் வசித்து வருகிறார். வீட்டின் வரவு-செலவு கணக்குகளை பச்சையம்மாள் கவனித்து வந்தார். இவர்கள் 15 ஏக்கர் நிலத்தில் விளைந்த முத்துச்சோளத்தை சேமித்து வைத்து, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெரம்பலூரில் விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் கிடைத்த ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்தில், கடன்கள் மற்றும் குடும்ப செலவுகள் போக மீதமிருந்த ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்தை வீட்டில் உள்ள அலமாரியில் பச்சையம்மாள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
+
Advertisement

