Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாயிகள், பயிர்க்காப்பீடு நிறுவனத்துடன் முத்தரப்பு கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்: குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் உறுதி

பெரம்பலூர்,செப்.26: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், நேற்று(25ஆம்தேதி) வெள்ளிக்கிழமை காலை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டக் கலெக்டர் அப்துல்ராசிக் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டாத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த மாவட்டக் கலெக்டர், அனைவரது கோரிக்கைகளுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், மாவட்டத்தில் அதிகளவில் தடுப்பணை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப் படும், சிறுவாச்சூரில் நடைபெறும் வாராந்திர ஆட்டுச் சந்தையினை பகலில் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பருவநிலை மாற்றம், புதிய மழையின்மை, கடும் வறட்சி, பூச்சி, நோய் தாக்குதல், தரமற்ற விதை போன்றவற்றால் பாதிக்கப் படும் விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தர ஏதுவாக, பயிர்க் காப்பீடு சம்மந்தமாக வேளாண்துறை, விவசாயிகள் மற்றும் பயிர்க் காப்பீடு நிறுவனம் ஆகியவற்றுடன் முத்தரப்புக் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்தார்.