பெரம்பலூர், செப். 26: நேற்றுடன் காலாண்டுத் தேர்வு முடிவடைந்தது. இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அக் 5ம்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த 16ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவை 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு 24ம் தேதியுடன் முடிவடைந்தது.
11,12ம் வகுப்புகள் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான காலண்டுத் தேர்வுகள் நேற்றுடன் (25ம் தேதி) முடிவடைந்தது. தொடர்ந்து இன்று (26ம் தேதி) முதல் அக்டோபர் மாதம் 4ம் தேதி வரை காலாண்டு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 5ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

