Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

டிப்பர் லாரி பறிமுதல் வங்கி கணக்கிற்கு வராமல் விடுபட்டுள்ள காப்பீட்டு திட்ட நிதியை விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும்

பெரம்பலூர், ஜூன் 26: வங்கி கணக்கிற்கு வராமல் விடுபட்டுள்ள காப்பீட்டுத் திட்ட நிதியை விவசாயிகளுக்கு பெற்று தர வேண்டும் என பெரம்பலூர் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில் நடைபெற்றது. வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குனர் தேவநாதன், பெரம்பலூர் வருவாய் ஆர்டிஓ அனிதா, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பாபு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், பெரம்பலூர் நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், வேளாண் துணை இயக்குனர் விற்பனை வணிகம் தெய்வீகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை இந்திராணி வரவேற்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வேப்பந்தட்டை ஜெயராமன் பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டம் மிகுந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். எனவே சாதாரண விவசாயிகளுக்கும் பயனளிக்கும் திட்டங்களை பெற்றுத்தர வேண்டும். வங்கிக் கணக்கிற்கு வராமல் விடுபட்டுள்ள காப்பீட்டுத் திட்ட நிதியை விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும். வேப்பந்தட்டை தாலுகாவில் 12 கிராமங்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்காமல் விடுபட்டுள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 73 ஏரிகளின் நிலையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பருவ மழைக்கு அனைத்து ஏரிகளையும் தயார்படுத்த வேண்டும்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தலைவர் விஸ்வநாதன் பேசியதாவது: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 73 ஏரிகளில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். தமிழக அளவில் அதிகப்படியாக விளையக்கூடிய மக்காச் சோளத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகள் வெங்காய விதைக்காய் வாங்கி சாகுபடி செய்துகொள்ள ரூ 40 ஆயிரம் பணமாக, பின்னேற்பு மானியமாக வழங்க வேண்டும்.

மக்காச்சோள விவசாயிகளிடம் ரூ 1000, ரூ 500 பெற்றுக்கொண்டு விதைகளையும், இடுபொருட்களையும் வழங்கி வருவதற்கு பதிலாக, ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் பணமாக பின்னேற்பு மானியமாக வழங்க வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் மலையாளப்பட்ட வரதராஜன், தமிழக விவசாயிகள் கட்சித்தலைவர் ராமராஜ், விவசாயிகள் மணி, பாலகிருஷ்ணன், முத்து, சத்யசீலன் உள்ளிட்ட பலர் பேசினர். அனைத்துத்துறை முதன்மைநிலை அலு

வலர்கள் கலந்து கொண்டனர்.